இந்தியாவின் மேற்கு வங்கத்தில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் இல்லை: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
2024-06-15 16:48:44

இந்தியாவில் மேற்கு வங்கத்தில் பறவைக் காய்ச்சல் பரவுவதற்கான அச்சுறுத்தல் இல்லை என்றும் பொது மக்கள் பீதி அடைய தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

பறவைகளிடமிருந்து மனிதனுக்கு பரவக்கூடிய பறவைக் காயச்சல் நோய் பாதிப்பு இல்லை என்று மேற்கு வங்க முதன்மை சுகாதார செயலாளர் நாராயண் ஸ்வரூப் நிகாம் கூறினார்.

முட்டை, கோழி மற்றும் வாத்து இறைச்சி போன்றவற்றை உண்ண எந்த தடையும் இல்லை என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

இந்த வார தொடக்கத்தில், மேற்கு வங்கத்தில் 4 வயது குழந்தைக்கு எச்9என்2 வைரஸால் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட அக்குழந்தை மூன்று மாத சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.