ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரையில் மோசமாகியுள்ள சுகாதார நிலைமை
2024-06-15 17:39:23

உலக சுகாதார அமைப்பு ஜுன் 14ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஆண்டு அக்டோபர் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் மூண்ட பிறகு, ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரையில் வன்முறை சம்பவங்கள் அடிக்கடி ஏற்பட்டன. இவற்றில் சுகாதார நிலையங்கள் மீதான தாக்குதல்கள் அதிகம். இந்நிலையில் உள்ளூர் பிரதேசத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமுற்றோர் எண்ணிக்கை அதிகரித்தது.

இந்த அறிக்கையின்படி, இவ்வாண்டு ஜூன் 10ஆம் நாள் வரை, 126 குழந்தைகள் உள்ளிட்ட 521 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். தவிர, 800 குழந்தைகள் உள்ளிட்ட 5200 பாலஸ்தீனர்கள் காயமுற்றனர்.

ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரையின் சுகாதார நிலைமை மோசமாகி வருகிறது. இஸ்ரேல் அரசு உள்ளூர் பிரதேசத்தில் நுழைவாயில்களை மூடி, குடியிருப்பு இடங்களைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டது. மேலும், உள்ளூர் பிரதேசத்தின் பாதுகாப்பு நிலைமை மோசமாகி, குடிமக்களின் பயணத்துக்கு தடைகள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் சிகிச்சைப் பெறுவது, மேலதிக இன்னல்களைச் சந்தித்துள்ளது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.