ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கான 3வது சிறப்புக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் தற்காலிக அரசு பங்கெடுப்பு
2024-06-16 19:56:32

ஆப்கானிஸ்தான் தற்காலிக அரசின் செய்தித் தொடர்பாளர் ஜுன் 16ஆம் நாள் கூறுகையில், ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கான 3வது சிறப்புக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் தற்காலிக அரசு பங்கெடுக்கவுள்ளது. இது ஆப்கானிஸ்தானின் நலன்களுக்குப் பொருந்தியது என்றார்.

ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கான 3வது சிறப்புக் கூட்டம் ஜுன் 30 முதல் ஜூலை முதல் நாள் வரை கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெறும் என்று ஐ.நா முன்னதாக அறிவித்தது.