இலங்கையில் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் 2025ம் ஆண்டு நீக்கப்படும்
2024-06-16 17:27:03

இலங்கையில் மோட்டார் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை அடுத்த ஆண்டு தளர்த்துவதற்கான வரைபடத்தை இலங்கை அதிகாரிகள் வகுத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட தகவலை அந்நாட்டின் உள்ளூர் ஊடகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின் படி, 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், பயணிகள் வாகனங்கள் மற்றும் சிறப்பு நோக்க வாகனங்களின் இறக்குமதியுடன் தொடங்கும் இந்த திட்டம், அதைத் தொடர்ந்து நான்காவது காலாண்டில் சரக்கு போக்குவரத்து வாகனங்களின் இறக்குமதியும் தொடங்கும்  என தெரிவித்துள்ளது.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் கொரோனா வைரஸ் தொற்று நோயின் பாதிப்பு, பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் இலங்கை வாகன இறக்குமதிக்கு தடை விதித்தது

2022 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த இறக்குமதிச் செலவு 18 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக இருந்ததாகவும், இது 2021 ஆம் ஆண்டிலிருந்து 11.4 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.