காசா பிரதேசத்தில் 50 ஆயிரம் குழந்தைகளுக்கு கடும் பட்டினி
2024-06-16 19:49:43

பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் மூண்ட பிறகு, காசா பிரதேசத்தில் மனித நேய நெருக்கடி தீவிரமாகி வருகிறது. இப்பிரதேசத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து இன்மையினால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டிய நிலையில் இருக்கின்றனர் என்று ஐ.நாவின் அண்மை கிழக்கு பாலஸ்தீன அகதிகள் நிவாரணம் மற்றும் பொறியியல் அலுவலகம் 15ஆம் நாள் தெரிவித்தது.

மனித நேய மீட்புப் பொருட்கள் காசாப் பிரதேசத்தில் நுழைவதற்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளாதல், காசாப் பிரதேசத்தின் மக்கள், கடும் பட்டினியை எதிர்நோக்கியுள்ளனர் என்று இவ்வலுவலகம் எச்சரித்தது. மீட்பு உதவிப் பொருட்களை காசாப் பிரதேசத்துக்கு அனுப்பி, வினியோகிப்பதில் இன்னல்கள் அதிகம் என்றும் இதற்கு வசதி அளிக்கும் பொறுப்பை இஸ்ரேல் ஏற்க வேண்டும் என்றும் ஐ.நா குழந்தைகள் நிதியம் தெரிவித்தது.