சீன ஊடகக் குழுமத்துக்கு பிரேசிலின் துணை அரசுத் தலைவர் அளித்த சிறப்புப் பேட்டி
2024-06-16 19:22:06

ஜுன் 4 முதல் 8ஆம் நாள் வரை, பிரேசிலின் துணை அரசுத் தலைவர் ஜெரால்டோ அல்க்மின் சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின்போது, சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டி அளித்தார்.

இவ்வாண்டு, சீன-பிரேசில் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவாகும். இந்நிலையில் அவர் கூறுகையில், கடந்த 50 ஆண்டுகளில், பிரேசில் சீனாவுடன் இணைந்து, பலதரப்புவாதத்தைப் பேணிக்காத்து, பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை உருவாக்கின. இரு தரப்புகளின் நட்புறவு இடைவிடாமல் வலுவடைந்ததோடு, ஒத்துழைப்புகள் நெருக்கமாகி வருகின்றன என்றார்.

மேலும், வறுமை ஒழிப்பு, பொருளாதார அதிகரிப்பு, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி முதலிய துறைகளில், சீனா முன்மாதிரியாகப் பங்காற்றியுள்ளது. பல துறைகளில் இரு நாடுகள் கூட்டாக முயற்சிகளை மேற்கொள்ளலாம். உலகிற்கு பலதரப்புவாதம் தேவை. பலதரப்பு அமைப்புகளை வலுப்படுத்தி, பலதரப்புவாதத்துக்கு ஆதரவு அளித்து, நேர்மை, அமைதி, ஒற்றுமை ஆகியவற்றைக் கொண்ட உலகத்தின் உருவாக்கத்துக்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, உலகப் பொருளாதார அதிகரிப்பைச் சீனா முன்னேற்றி வருகிறது. சீனப் பொருளாதாரம் செழிப்பாக வளர்ந்தால், முழு உலகமும் பயனடையும் என்றும் தெரிவித்தார்.