தைவான் நீரிணை மன்றக் கூட்டம் நடைபெற்றது
2024-06-16 17:55:09

16ஆவது தைவான் நீரிணை மன்றக் கூட்டம் ஜுன் 15ஆம் நாள் சியா மென் நகரில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவருமான வாங் ஹுநிங் இக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், இரு கரை உடன்பிறப்புகள் சீனாவைச் சேர்ந்தவர்கள். ஒரே குடும்பத்தினர் ஆவர். அமைதி, வளர்ச்சி, பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு, இரு கரை உடன்பிறப்புகளில் பெரும்பாலோரின் விருப்பமாகும். தைவான் உடன்பிறப்புகளுக்கு மதிப்பு அளித்து, அன்பு வழங்கி, நன்மை புரிந்து, தைவான் உடன்பிறப்புகளின் நன்மை மற்றும் நலனைத் தொடர்ந்து அதிகரித்துள்ளோம். மேலதிக தைவான் உடன்பிறப்புகள், இரு கரைப் பரிமாற்றம், ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியிலும், தேசத்தின் மறுமலர்ச்சி போக்கிலும் பங்கெடுத்து, சீன நவீனமயமாக்கத்தின் வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொண்டு, சீனத் தேசத்தின் வளர்ச்சிக்கான மாபெரும் பெருமையைக் கூட்டாக அனுபவிப்பதை வரவேற்கிறோம் என்று தெரிவித்தார்.