நாகரிக உரையாடல் பற்றி சீனா வேண்டுகோள்
2024-06-16 18:00:53

சர்வதேச சமூகம் நாகரிக உரையாடலைப் பரவல் செய்து, நாடுகளுக்கிடையேயான பரஸ்பர நம்பிக்கையை அதிகரித்து, சமூக இணக்கத்தை விரைவுபடுத்தி, கூட்டு வளர்ச்சியை நனவாக்குவதை முன்னேற்ற வேண்டும் என்று ஐ,நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி ஃபு சுங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜுன் 14ஆம் நாள் ஐ.நா பாதுகாப்பவையின் இணக்கம் மற்றும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புப் பிரச்சினை பற்றிய கூட்டத்தில் அவர் உரை நிகழ்த்திய போது கூறுகையில், பல்வகைமை, உலக நாகரிகத்தின் அடிப்படை தனிச்சிறப்பாகும். பல்வகை நாகரிகங்கள் ஒன்றுக்கொன்று பரிமாற்றம் செய்து, கற்றுக்கொள்வது மனித குலத்தின் முன்னேற்றத்துக்கான ஊற்றுமூலமாகும் என்று தெரிவித்தார். சீனத் தலைவர் முன்வைத்த உலக நாகரிக முன்மொழிவை முன்வைத்து, உலக நாகரிகங்களின் பல்வகைத்தன்மைக்கு மதிப்பு அளிப்பதை முன்மொழிந்து, மனித குலத்தின் பொது மதிப்பைப் பரவல் செய்து, நாகரிக பரவல் மற்றும் புத்தாக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்து, சர்வதேச பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்ற கூறியுள்ளார். கடந்த வாரம், ஐ.நாவின் 78ஆவது பொது பேரவையில் சீனா முன்வைத்த வரைவு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆண்டுதோறும் ஜுன் 10ஆம் நாள் நாகரிக உரையாடலுக்கான சர்வதேச தினம் என நிர்ணயிக்கப்பட்டது. பன்னாடுகள் இவ்வரைவு தீர்மானத்தைச் செயல்படுத்துவதை வாய்ப்பாக கொண்டு, நாகரிக உரையாடலின் முக்கிய பங்கினை முழுமையாக வெளிக்கொணர்ந்து, பாகுபாடு மற்றும் தவறான எண்ணங்களை அகற்றி, பொது மக்களிடையேயான தொடர்பை விரைவுபடுத்தி, ஒத்துழைப்பு மூலம் மனித குலத்தின் கூட்டு அறைகூவலைச் சமாளிப்பதற்கு இயக்கு ஆற்றலை வழங்க வேண்டும் என சீனா வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.