இந்தியாவில் மொத்த விற்பனை பணவீக்கம் 2.62 சதவீதமாக உயர்வு
2024-06-16 17:25:53

இந்தியாவின் மொத்த விற்பனை பணவீக்கம், ஏப்ரலில், 1.26 சதவீதத்தில் இருந்து, மே மாதத்தில், 2.62 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"2024ம் ஆண்டின்  மே மாதத்தில் பணவீக்கத்தின் நேர்மறையான  உயர்வு விகிதம், உணவுப் பொருட்கள், உணவுப் பொருட்களின் உற்பத்தி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, கனிம எண்ணெய்கள், பிற உற்பத்தி போன்றவற்றின் விலை அதிகரிப்பால் ஏற்பட்டது" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் 7.74 சதவீதமாக இருந்த உணவுத் துறை பணவீக்கம் மே மாதத்தில் 9.82 சதவீதமாக உயர்ந்துள்ளது.