சீனத் தலைமையமைச்சரின் ஆஸ்திரேலியப் பயணம் துவங்கியது
2024-06-16 16:56:30

ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர் அல்பானீஸின் அழைப்பை ஏற்று, சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் ஜுன் 15ஆம் நாள் பிற்பகல் அதேலேத் நகரைச் சென்றடைந்து, ஆஸ்திரேலியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளத் துவங்கினார். அவர் ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர் அல்பானீஸுடன் சீன-ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர்களின் 9ஆவது சுற்று சந்திப்பை நடத்தவுள்ளார்.

லீ ச்சியாங் கூறுகையில், சீன-ஆஸ்திரேலிய பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு உருவாக்கப்பட்டதன் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொள்கிறேன். ஆஸ்திரேலியத் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறையினருடன் இரு நாட்டுறவு மற்றும் பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, இரு தரப்பு ஒத்துழைப்பு பற்றி விவாதித்து, இரு நாடுகளின் வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்றி, இரு நாட்டு நட்புறவு பற்றி உரையாடுவதை எதிர்பார்க்கிறேன். மேலும் பக்குவமடைந்த, மேலதிக சாதனைகளைப் பெறக்கூடிய சீன-ஆஸ்திரேலிய பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு, இரு நாட்டு மக்களின் பொது செல்வமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

நியூசிலாந்து நாட்டில் தனது அதிகாரப்பூர்வ பயணத்தை முடித்து கொண்ட பின் லீ ச்சியாங் அதேலேத் நகரைச் சென்றடைந்தார்.