பிலிப்பைன்ஸ் விநியோகப் கப்பல் மீது சீன கடலோர காவல்படை நடவடிக்கை
2024-06-17 09:25:03

பிலிப்பைன்ஸின் விநியோகக் கப்பல் ஒன்று ஜுன் 17ஆம் நாள் சீனாவின் நான்ஷா தீவுகளின் ரென்ஏய் ஜியவோ பகுதிக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்தது. இதனைத் தொடர்ந்து சீனக் கடலோரா காவல் படை சட்டத்தின்படி இப்பக்கல் மீது கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொண்டது.

சீனாவின் பல எச்சரிக்கைகளை பிலிப்பைன்ஸின் இக்கப்பல் பொருட்படுத்தவில்லை. அத்துடன், கடலில் மோதல் தடுப்புக்கான சர்வதேச விதிகளை மீறி இயல்பாக பயணித்து கொண்டிருந்த சீனக் கப்பல் மீது வேண்டுமென்றே நெருங்கி சென்றதால் மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்துக்கு பிலிப்பைன்ஸ் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.