இலங்கை கடற்படையினர் 702 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்தனர்
2024-06-17 18:54:00

இலங்கைக்குள் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட 702 கிலோ கிராம்  பீடி இலைக் கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

இலங்கைக்குள் பெருமளவிலான சட்டவிரோத பொருட்கள் ஊடுருவுவதைத் தடுக்கும் நோக்கில் கடலோரப் பகுதிகளில் வழக்கமான தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அதன் ஒருபகுதியாக, வடமேற்கு கடற்படையின் எஸ்.எல்.என்.எஸ் தம்பபண்ணி என்னும் ரோந்துக் கப்பல் கடந்த சனிக்கிழமை தலுவா பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டது.

அப்போது சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 19  மூட்டைகளில் இருந்த பீடி இலை கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட முன்றுச் சக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.