மே திங்களில் சீனப் பொருளாதார நிலைமை
2024-06-17 11:33:40

மே திங்களுக்கான சீனப் பொருளாதாரத்தின் பல்வேறு தரவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இத்தரவுகளின்படி, தொழிற்துறையின் உற்பத்தி ஒப்பீட்டளவில் வேகமாக அதிகரித்தது. உபகரணங்களின் தயாரிப்பு மற்றும் உயர் தொழில்நுட்ப தயாரிப்புத் துறை சீராக வளர்ந்துள்ளன. மே திங்களில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் கூடுதல் மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 5.6விழுக்காடு அதிகமாகும். ஏப்ரலில் இருந்ததை விட, 0.30விழுக்காடு அதிகமாகும்.

மேலும், சீனாவின் சேவைத் துறை தொடர்ந்து மீட்சி பெற்றுள்ளது. நவீன சேவைத் துறை சீராக வளர்ந்துள்ளது. சீனச் சேவைத் துறையின் உற்பத்திக் குறியீடு கடந்த ஆண்டை விட, 4.8விழுக்காடு அதிகமாகும். ஏப்ரலை விட, 1.3விழுக்காடு அதிகமாகும்.

நிலையான சொத்து முதலீட்டு அளவு விரிவாகியது. உயர் தொழில்நுட்ப துறையின் முதலீட்டு அதிகரிப்பு வேகமாக இருந்தது. ஜனவரி முதல் மே வரை, சீனாவின் நிலையான சொத்துகளின் முதலீட்டுத் தொகை 18லட்சத்து 80ஆயிரத்து 60கோடி யுவானை எட்டியது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 4.0விழுக்காடு அதிகமாகும்.

சரக்குகளின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விரைவாக அதிகரித்தது. வர்த்தக கட்டமைப்பில் மேம்பாடு தொடர்ந்தது. சரக்குகளின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் தொகை 3லட்சத்து 70ஆயிரத்து 770கோடி யுவானை எட்டி கடந்த ஆண்டை விட, 8.6விழுக்காடு அதிகரித்தது.