ஆஸ்திரேலிய நாடாளுமன்ற செனெட் அவை மற்றும் பிரதிநிதிகள் அவைத் தலைவர்களுடன் லீச்சியாங் சந்திப்பு
2024-06-17 14:54:24

சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங், ஜூன் 17ஆம் நாள் காலை கான்பெராவில் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற செனெட் அவைத் தலைவர் சூ லைன்ஸ், பிரதிநிதிகள் அவைத் தலைவர் மில்டன் டிக் ஆகியோரைச் சந்தித்துரையாடினார்.

அப்போது லீச்சியாங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில், சீன-ஆஸ்திரேலிய உறவு திருப்பங்களைக் கடந்து கடினமான சூழலுக்குப் பின் இயல்பான பாதைக்குத் திரும்பியுள்ளது. அடுத்து மாபெரும் வளர்ச்சியைப் பெறுவதற்கு இரு தரப்பின் கூட்டு முயற்சி தேவைப்படுகிறது. அதற்கு இரு நாடுகளின் சட்டமியற்றும் அமைப்புகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. சீனா மற்றும் ஆஸ்திரேலியப் பொருளாதாரத் துறையில் பரஸ்பரம் நிறைவு செய்யும் தன்மை வலுவானது. இரு நாடுகளுக்கும் பரந்துபட்ட ஒத்துழைப்பு வாய்ப்புகளும் உண்டு. இரு நாடுகளிடையில் பயனுள்ள ஒத்துழைப்புகளுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமனறம் ஆக்கப்பூர்வமாக ஆதரவளித்து அதற்கு சீரான சட்ட உத்தரவாதம் மற்றும் அரசியல் சூழலை வழங்க வேண்டுமென லீச்சியாங் விருப்பம் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றம், சீனாவுடன் இணைந்து பேச்சுவார்த்தை மற்றும் பரிமாற்றத்தை வலுப்படுத்தி இரு நாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்றி இரு நாட்டு மக்களுக்கு நன்மைகளைப் படைக்க விரும்புவதாக லைன்ஸ் மற்றும் மில்டன் டிக் தெரிவித்தனர்.