லிப்ரல் ஜனநாயகக் கட்சியின் ஆதரவு விகிதம் 19 வீழ்ச்சி
2024-06-17 11:40:22

ஆசாஹி ஷிம்பன் எனும் ஜப்பானின் செய்தி ஊடகம் 17ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, லிப்ரல் ஜனநாயகக் கட்சியின் ஆதரவு விகிதம் கடந்த மாதத்திலிருந்து 5 விழுக்காடு சரிந்து 19 விழுக்காடாக குறைந்துள்ளது என்று ஜூன் 15 மற்றும் 16ஆம் நாட்களில் ஜப்பான் முழுவதும் தொலைபேசி மூலம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

கிஷிடாவின் அமைச்சரவைக்கான ஆதரவு விகிதம் 22 விழுக்காடாகும். இது கடந்த மாத்த்தில் நடைபெற்ற கருத்து கணிப்பை விட 2 விழுக்காடு குறைந்துள்ளது. இது கிஷிடாவின் அமைச்சரவை அமைக்கப்பட்டதிலிருந்து மிகக் குறைந்த ஆதரவு விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.