தீவிரமான வானிலைக்கு தீர்வு! வளர்ச்சி அடைந்த நாடுகளுக்குப் பொறுப்பு
2024-06-17 16:30:40

இந்தியாவில் அதிகபட்ச வெப்ப நிலை தொடர்ந்து நிலவி வருகிறது. ஸ்பெயினில் வறட்சி மோசமாகியுள்ளது. ஜெர்மனி வெள்ளப்பெருக்கால் தாக்கப்பட்டது. சீனாவின் பல்வேறு பிரதேசங்களில் வலுவான எதிர்மறை வானிலை நிலவியது. உலகளவில் தீவிரமான காலநிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் வெளியிட்ட இணைய ஆய்வின்படி, வளர்ச்சியடைந்த நாடுகள் உண்மையாக பொறுப்பேற்று, உலகளவில் காலநிலை மாற்றத்தை ஆக்கப்பூர்வமாகச் சமாளிக்க வேண்டும் என்று 86.26 விழுக்காட்டினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உலகப் பொருளாதாளா மன்றம் வெளியிட்ட 2024ஆம் ஆண்டு உலக இடர்பாடு அறிக்கையின்படி, தீவிரமான காலநிலை, உலகம் எதிர்நோக்குகின்ற மிகப் பெரிய இடர்பாடாக விளங்குகிறது. இத்தகைய இடர்பாடு வேகமாக வளர்ந்து வருகிறது. 73.92 விழுக்காட்டினர் தீவிரமான காலநிலையைச் சந்தித்துள்ளனர். தீவிரமான காலநிலை அடிக்கடி நிகழும் என்பது பற்றி 80.13 விழுக்காட்டினர் கவலை தெரிவித்துள்ளனர்.