வட கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் புதின் பயணம்
2024-06-17 19:49:11

கிரெம்ளின் மாளிகை வெளியிட்ட தகவலின்படி, ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் ஜுன் 18, 19 ஆகிய நாட்களில், வட கொரியாவிலும், 19, 20 ஆகிய நாட்களில் வியட்நாமிலும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

கொரிய தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளரும், தேசிய விவகாரத் தலைவருமான கிம் ஜோங்-உனின் அழைப்பை ஏற்று, ரஷிய அரசுத் தலைவர் புதின் ஜுன் 18 மற்றும் 19ஆம் நாள் வட கொரியாவில் பயணம் மேற்கொள்வதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் 17ஆம் நாள் தெரிவித்தது.

மேலும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் நுயென் பு ட்ரோங்கின் அழைப்பை ஏற்று, ரஷிய அரசுத் தலைவர் புதின் ஜுன் 19 மற்றும் 20ஆம் நாள் வியட்நாமில் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று வியட்நாம் தரப்பு 17ஆம் நாள் தெரிவித்தது.