7வது சீன-ஆஸ்திரேலிய தொழில் மற்றும் வணிக துறை கூட்டத்தில் இருநாட்டுத் தலைமையமைச்சர்கள் பங்கெடுப்பு
2024-06-18 16:12:59

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், ஆஸ்திரேலிய தலைமையமைச்சர் அன்டோனி அல்பேனீஸுடன் ஜூன் 18ஆம் நாள் காலை 7வது சீன-ஆஸ்திரேலிய தொழில் மற்றும் வணிக துறையின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் வட்ட மேசைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

லீ ச்சியாங் கூறுகையில், சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்குமிடையிலான 52 ஆண்டுகால தூதாண்மை உறவில், இரு நாடுகள் ஒன்றுக்கு ஒன்று தேசிய நிலைமை மற்றும் முக்கிய நலன்களை மதிக்கும் வரை, ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையின் அடித்தளத்தைத் தொடர்ந்து உருவாக்க முடியும். வெளிப்படையான பேச்சுவார்த்தை மற்றும் சகிப்புத்தன்மையை இரு நாடுகள் கடைப்பிடிக்கும் வரை, முரண்பாடுகள் மற்றும் வேறுபாடுகளைச் சரியாக கட்டுப்படுத்த முடியும். திறந்த ஒத்துழைப்பு மற்றும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவு அளிப்பதை இரு நாடுகள் நிலைநிறுத்தும் வரை, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெற முடியும். சீனா-ஆஸ்திரேலிய ஒத்துழைப்புக்குப் பரந்த வாய்ப்புகள் உள்ளன. இது, தொழிற்துறை சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலியை நிதானப்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் முக்கிய சக்தியாகும் என்றார்.