முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.3 சதவீதமாக அதிகரிப்பு
2024-06-18 17:46:19

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.3 சதவீதத்தை எட்டியிருப்பதாக அந்நாட்டின் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

காலாண்டு அறிக்கையின் புள்ளி விவரக் குறிப்புகளை மேற்கோள் காட்டி, அமைச்சர் சியம்பலாபிட்டிய, தொழில் துறை மட்டும் 11.8 சதவீதம் வளர்ந்துள்ளதாகவும் கூறினார்.

முந்தைய ஆண்டில் இலங்கை எதிர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்ததாகவும், தற்போதைய சாதனை நாட்டின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த ஆண்டு இலங்கையின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 2.2 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு 336 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதற்கான திட்டத்தின் இரண்டாவது ஆய்வை அண்மையில் நிறைவு செய்துள்ளது  குறிப்பிடத்தக்கது.