ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரையிலுள்ள சூழ்நிலை பற்றிய ஐ.நா அதிகாரி ஒருவரின் வேண்டுகோள்
2024-06-18 19:37:22

ஜுன் 18ஆம் நாள் நடைபெற்ற ஐ.நாவின் மனித உரிமை கவுன்சிலின் 56வது உயர்நிலை கூட்டத்தின் துவக்க நிகழ்வில், மனித உரிமைக்கான ஐ.நாவின் உயர் ஆணையர் வோல்கர் துர்க் கூறுகையில், கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரையிலுள்ள சூழ்நிலை தீவிரமாக மோசமாகி வருகிறது. ஜுன் 15ஆம் நாள் வரை, புதிய சுற்று பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலில், இப்பிரதேசத்தைச் சேர்ந்த 133 குழந்தைகள் உள்ளிட்ட 528 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். 23 இஸ்ரேல் நபர்கள் உயிரிழந்தனர் என்றார்.

மேலும், இம்மோதலுடன் தொடர்புடைய பல்வேறு தரப்புகள் சர்வதேச மனித உரிமை மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை அலட்சியப்படுத்துவதற்கு அவர் அதிர்ச்சி தெரிவித்தார். ஐ.நா பாதுகாப்பவை மற்றும் சர்வதேச நீதி மன்றம் வழங்கிய கட்டுப்பாட்டு ஆற்றல் கொண்ட தீர்ப்பு முடிவுக்கு பல்வேறு தரப்புகள் மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.