சீனா-ஐரோப்பா சரக்கு ரயில் சேவையின் புதிய சாதனை
2024-06-19 19:52:43

மே திங்கள், சீனா-ஐரோப்பா சரக்கு ரயில் சேவையின் மூலம் ஒரு மாதத்துக்கு அனுப்பப்பட்ட சரக்கு  அளவு புதிய சாதனையைப் பெற்றுள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் ஜுன் 19ஆம் நாள் கூறுகையில், தொடர்புடைய நாடுகளுடன் கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டு, சீனா-ஐரோப்பா சரக்கு ரயில் சேவையின் உயர்தர வளர்ச்சியை முன்னேற்றி, உலகத் தொழில் துறை மற்றும் விநியோகச் சங்கிலியின் நிலைத்தன்மையைப் பேணிக்காக்க சீனா விரும்புகிறது என்றார்.

இவ்வாண்டு, சீனா-ஐரோப்பா சரக்கு ரயில் சேவை, பெரும் சாதனையைப் பெற்று வருகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் ஈர்ப்பு ஆற்றலையும், சீனப் பொருளாதாரத்தின் வலிமையையும் முழு உலகமும் இதன் மூலம் உணர்ந்து கொண்டுள்ளது. மே திங்கள், சீனச் சரக்குகளின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 8.6 விழுக்காடு அதிகமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.