சிசாங் விவகாரத்தில் எந்த வெளிநாட்டு தலையீடுகளையும் அனுமதிக்க மாட்டோம்: சீனா
2024-06-19 09:19:31

சிசாங் என்பது வரலாற்றில் சீனாவின் ஒரு பகுதியாகும். சிசாங் விவகாரம் முற்றிலும் சீனாவின் உள்விவகாரங்களைச் சேர்ந்தவை. அதில் எந்த வெளிநாட்டுத் தலையீடுகளையும் சீனா அனுமதிக்காது என்று சீன வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் சட்ட வரைவு ஒன்று குறித்து 18ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் இந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியன் இதைத் தெரிவித்தார்.

தற்போது அமைதி மற்றும் இணக்கம் கொண்ட சமூகச் சூழ்நிலையைக் கொண்ட சிசாங்கின் பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகிறது. சிசாங்கில் குழப்பத்தை ஏற்படுத்துவதன் மூலம் சீனாவை அடக்குமுறை செய்ய முயலும் எந்த வெளிநாட்டு சக்தியும் தோல்வியடையும் என்றும் லின்ஜியன் கூறினார்.

சிசாங், சீனாவின் ஒரு பகுதி ஆகும் என்பதை ஏற்றுக்கொண்டு, சிசாங் சுதந்திரத்தை ஆதரிக்காது என்ற வாக்குறுதியை கடைப்பிடிக்குமாறு அமெரிக்காவுக்கு அறிவுறுத்துகிறோம் என்றும், சொந்தமான இறையாண்மை, பாதுகாப்பு, வளர்ச்சி நலன் ஆகியவற்றை பேணிக்காக்க சீனா பயனுள்ள நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அவர் வலியுறுத்தினார்.