அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு
2024-06-19 17:38:43

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கடந்த புதன்கிழமை அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு, அசாமில் உள்ள கரீம்கஞ்ச் மாவட்டத்தின் பதர்பூர் பகுதியில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிறுவன் உள்பட 5  பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெள்ளத்தால் 15 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 209 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 470 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாகவும், சுமார் 1,378 ஹெக்டேர் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ஏ.எஸ்.டி.எம்.ஏ) தெரிவித்துள்ளது.

கரீம்கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 152,133 பேர் வெள்ள நீரில் சிக்கி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 43 நிவாரண முகாம்களில் இதுவரை 5,114 பேர் ள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளத்தால் சாலைகள் மற்றும் பாலங்களின்  சேதங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் உதவிகள் வழங்குவதில் சிரமங்கள் அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.