சீன-ஆஸ்திரேலிய வளர்ச்சி முன்னேற்றப் போக்கு
2024-06-19 09:04:12

சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 15ஆம் நாள் முதல் 18ஆம் நாள் வரை, ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டார். சீன-ஆஸ்திரேலிய தலைமையமைச்சர்களின் ஆண்டு சந்திப்புச் சாதனைக்கான கூட்டு அறிக்கையை இரு தரப்பும் வெளியிட்டன. பொருளாதார வர்த்தகம், மானிடப் பண்பாடு போன்ற துறைகளில் ஒத்துழைப்புகளையும் இரு தரப்பும் எட்டியுள்ளன. இரு நாட்டுறவை நிதானப்படுத்தும் மிக முக்கியப் படியாக இப்பயணம் திகழ்கிறது என்று ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர் அல்பானீஸ் தெரிவித்தார்.

இவ்வாண்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அந்நாட்டில் அரசு முறை பயணம் மேற்கொண்டு, இரு தரப்புகளுக்கிடையில் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 10ஆவது ஆண்டு நிறைவாகும். கடந்த 10 ஆண்டுகளில், இரு தரப்பு உறவில் ஏற்றத்தாழ்வு காணப்பட்டது. 2022ஆம் ஆண்டின் மே திங்களில், அந்நாட்டின் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, சீனா மீதான கொள்கையை மீண்டும் சரிப்படுத்தி, இரு தரப்புறவு மீட்சியடைய தொடங்கியது.  

ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் உள்ள இரு நாடுகளுக்கிடையில் பரந்தப்பட்ட ஒருமித்த கருத்துக்கள் இடம்பெறுகின்றன. இரு தரப்பும் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன், பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தை பேணிக்காக்க வேண்டும். ஏற்றத்தாழ்வு காலம் காலத்தை கடந்து, தற்போது உறவு மேம்படும் பாதையில் முன்னேற்றி செல்லும் இரு நாடுகள், பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஆதரவு அளிக்கும் கூட்டாளியாக இருக்க வேண்டும். இது, இரு நாட்டு மக்களின் பொதுவான நலன்களுக்குப் பொருந்தியது. தவிரவும், இது, பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காப்பதற்குத் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.