2023-24 நிதியாண்டில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி முன்கண்டிராத அளவு உயர்வை எட்டியுள்ளது
2024-06-20 16:44:57

2023-24 நிதியாண்டில் நாட்டின் கடல் உணவு ஏற்றுமதி, பல்வேறு சவால்களுக்கு மத்தியில் முன் கண்டிராத அளவுக்கு உயர்ந்துள்ளதாக இந்திய அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் 7.38 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 17 லட்சத்து 81 ஆயிரத்து  602 டன் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்துள்ளது.

ஏற்றுமதி அளவு 2.67 சதவீதம் அதிகரித்தது, ஆனால் பண மதிப்பில் 8.77 சதவீதம் குறைந்தது. கடல் உணவு ஏற்றுமதி பட்டியலில் பதப்படுத்தப்பட்ட இறால் முதலிடத்தில் உள்ளது. இது மொத்த அளவில் 40.19 சதவீதமும், மொத்த வருவாயில் 66.12 சதவீதமும் ஆகும்.

அமெரிக்காவும் சீனாவும் இந்தியாவின் கடல் உணவுகளை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளாக உள்ளன.