சீனத் தலைமையமைச்சர்-மலேசிய அதி உயர் தலைவர் பேச்சுவார்த்தை
2024-06-20 09:59:28

சீனத் தலைமையமைச்சர் லிச்சியாங் 19ஆம் நாள் பிற்பகல், மலேசிய அதி உயர் தலைவர் இப்ராஹிம் ஆகிய இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த மலேசிய பயணம், இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையில் முக்கிய ஒருமித்த கருத்துக்களைச் செயல்படுத்தி, இரு தரப்பு உறவின் வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்துவது என்பது நோக்கமாகும். மலேசியாவுடன் இணைந்து, ஒன்றுக்கு ஒன்று அரசியல் நம்பிக்கையை அதிகரித்து, உயர் நிலை பரிமாற்றத்தை அதிகரிக்க வேண்டும். இரு நாடுகளின் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இரு தரப்புகளின் ஒத்துழைப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை அளிக்க வேண்டும் என்று லிச்சியாங் தெரிவித்தார்.

இரு தரப்பு உறவில் மலேசியா மிகவும் கவனம் செலுத்தி வருகிறது. சீனாவுடன் இணைந்து, பொருளாதார வர்த்தகம், தொழில் நுட்பம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளிலுள்ள ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, இரு தரப்பு உறவை புதிய கட்டத்திற்கு எடுத்துச் சென்று, சீன நிறுவனங்கள் மலேசியாவில் முதலீடு செய்ய வரவேற்கின்றோம் என்று இப்ராஹிம் தெரிவித்தார்.