வர்த்தகத்துக்கான உதவி பற்றிய 9வது உலகப் பரிசீலனை மாநாட்டில் சீனா பங்கேற்பு
2024-06-20 17:09:30

சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹே யாதொங் ஜுன் 20ஆம் நாள் கூறுகையில், வர்த்தகத்துக்கான உதவி பற்றிய 9வது உலகப் பரிசீலனை மாநாடு ஜுன் 26 முதல் 28ஆம் நாள் வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. உணவு பாதுகாப்பு, எண்ணியல் தொடர்பு, வர்த்தகத்தின் மேலும் பெரும் பங்கு ஆகிய 3 கருப்பொருட்கள் குறித்து, பல்வேறு தரப்புகள் விவாதம் நடத்தவுள்ளன என்றார்.

மேலும், சீனா நடப்பு மாநாட்டில் பங்கெடுத்து, பிற வளரும் நாடுகள் குறிப்பாக மிக குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் வர்த்தக திறனை உயர்த்துவதற்கான உதவி நடவடிக்கைகளைப் பன்முகங்களிலும் எடுத்துக்கூறும். தவிர, உணவுப் பாதுகாப்பு என்ற தலைப்பில் சீனா கிளை கூட்டத்தை நடத்தவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில், உலகளாவிய வளர்ச்சி முன்மொழிவைச் சீனா ஆக்கமுடன் செயல்படுத்தி, தெற்கு தெற்கு ஒத்துழைப்பின் கட்டுகோப்பின் கீழ், வர்த்தகத்துக்கான உதவி பற்றிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்புடைய நாடுகள் சர்வதேச வர்த்தகத்தில் பங்கெடுக்கும் திறனை இது உயர்த்தி, மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்றுகிறது என்றும் ஹே யாதொங் கூறினார்.