நட்சத்திரங்களின் சொந்த ஊரான அழகான நிங்ஜியா ஹூய் இனத் தன்னாட்சிப் பிரதேசம்
2024-06-21 09:52:01

நிங்ஜியா ஹூய் இனத் தன்னாட்சிப் பிரதேசம், சீனாவின் ஐந்து சிறுபான்மை தேசிய இனப் பிரதேசங்களில் ஒன்றாகும். இப்பகுதியில் மலைகள், ஏரிகள், கோபி பாலைவனம், புல்வெளிகள் மற்றும் சதுப்பு நிலம் முதலிய பல இயற்கைக்காட்சிகள் ஒன்றிணைந்து காணப்படுகின்றன.  கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியானது, “நட்சத்திரங்களின் சொந்த ஊர்” என்ற தொழில் சின்னத்தைத் தொடர்ந்து முன்னேற்றி, சுற்றுலா சந்தையை மேம்படுத்த பாடுபட்டு வருகின்றது.