இலங்கையில் ஜூலை மாதம் சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்
2024-06-21 17:25:37

தெற்காசியாவின் சுற்றுலா மையமான இலங்கையின் திரைப்படத் துறையை புத்துயிர் பெறச் செய்யும் அதேவேளையில், உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களை ஒளிபரப்பும் வகையில் கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவை ஜூலை 8 ஆம் நாள் முதல் நடத்த உள்ளதாக இலங்கை அரசின் செய்தித்துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஈரான், பிரான்ஸ், இந்தியா, தென் கொரியா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து விருது பெற்ற திரைப்படங்களைக் காணும் வாய்ப்பை இலங்கை திரைப்பட ரசிகர்களுக்கு இந்த திரைப்பட விழா வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வின் மூலம், திரைப்படத்துறை மாணவர்கள் உலகளாவிய சிறந்த திரைப்படங்கள் மூலம் திரைத்துறை குறித்த பரந்த புரிதலையும் அனுபவத்தையும் பெறுவார்கள் என்றும் அத்துறை தெரிவித்துள்ளது.

தேசிய திரைப்பட நிறுவனம் மற்றும் இலங்கை சுற்றுலா வளர்ச்சி மையத்தின் முன்முயற்சியின் கீழ் ஊடகத்துறை அமைச்சர் மற்றும் சுற்றுலா அமைச்சர் சமர்ப்பித்த கூட்டு ஆவணத்திற்கு அந்நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.