அகதிகள் பிரச்சினை பற்றி குட்ரேஸ் வேண்டுகோள்
2024-06-21 17:16:07

உலக அகதிகள் தினம் குறித்து ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் ஜுன் 20ஆம் நாள் காணொளி வழியாக உரை நிகழ்த்தியபோது, சர்வதேச சமூகம் அகதிகளுக்கு மேலதிக பாதுகாப்பு மற்றும் ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மோதல், கலவரம், காலநிலை சீற்றம் ஆகியவற்றின் பாதிப்பிலிருந்து தப்பிச் சென்று வீடுவாசலின்றி அல்லல்படும் அகதிகளின் எண்ணிக்கை உச்ச நிலையில் உள்ளது. உலகம் ஒற்றுமையுடன் அகதிகளின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். சமத்துவமான வாய்ப்புகள், வேலைகள், வீடுகள், மருத்துவச் சிகிச்சை முதலியவை அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜுன் 20ஆம் நாள் உலக அகதிகள் தினமாகும். ஐ.நாவின் புதிய தரவுகளின்படி, தற்போது உலகளவில் 4 கோடியே 35 லட்சம் அகதிகள் உள்பட 12 கோடி பேர் தாயகத்திலிருந்து தப்பிச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.