77 நாடுகள் குழுவுடன் நிற்கின்ற சீனா
2024-06-21 19:31:16

77 நாடுகள் குழு நிறுவப்பட்டதன் 60ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம் 20ஆம் நாள் வியன்னாவில் நடைபெற்றது. வியன்னாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதிக்குழு இந்நிகழ்வில் கலந்து கொண்டது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியன் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், 77 நாடுகள் குழு சர்வதேச விவகாரங்களில் ஈடிணையற்ற பங்காற்றியுள்ளது. சீனா இக்குழுவின் உற்ற கூட்டாளியாக இருந்து, இக்குழுவுடன் எப்போதும் உறுதியுடன் நிற்கின்றது என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இவ்வாண்டு பஞ்ச சீல கோட்பாடுகள் வெளியிடப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவாகும். பல வளரும் நாடுகளுடன் இணைந்து, புதிய சூழ்நிலையில் சர்வதேச உறவு மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படை கோட்பாடான பஞ்ச சீல கோட்பாடுகளைப் பரவல் செய்து, சமத்துவமான ஒழுங்கான உலக பல துருவமயமாக்கம் மற்றும் இணக்கமான பொருளாதார உலகமயமாக்கத்தை ஆக்கமுடன் ஆதரித்து, கூட்டு வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சிக்காகவும், மனித குலத்தின் பொது எதிர்கால சமூகத்தின் உருவாக்கத்துக்காகவும் பாடுபட சீனா விரும்புவதாக தெரிவித்தார்.