சீன-மலேசிய தொழில் மற்றும் வணிகத் துறை மன்றக் கூட்டத்தில் சீனத் தலைமையமைச்சரின் பங்கெடுப்பு
2024-06-21 09:10:41

சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் மற்றும் மலேசிய தலைமையமைச்சர் அன்வர் ஆகிய இருவரும் 20ஆம் நாள் மலேசியாவில் சீன-மலேசிய தொழில் மற்றும் வணிக துறையினர்களின் மதிய விருந்தில் பங்கெடுத்து உரைநிகழ்த்தினர். இதில் இரு நாடுகளையும் சேர்ந்த சுமார் 200 தொழில் மற்றும் வணிக துறையினர்கள் கலந்துகொண்டனர்.

லிச்சியாங் பேசுகையில், இரு நாட்டு நிறுவனங்களும் தொடர்ந்து ஒன்றுக்கு ஒன்று சந்தை வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில், இருநாட்டினரும், பிராந்திய பன்முகப் பொருளாதார கூட்டாளியுறவுக்கான உடன்படிக்கையை சீராகப் பயன்படுத்த வேண்டும் என்றார். மேலும், தொழில் மற்றும் வணிகத் துறையினர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர்களின் கூட்டு முயற்சியின் காரணமாக, அடுத்து வரும் 50 ஆண்டுகள், இரு தரப்பு உறவின் பொற்காலமாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

அன்வர் கூறுகையில், இரு தரப்பு நட்புறவை ஆழமாக்க மலேசியா உறுதியான முன்னெடுப்புகளை எடுக்கும் எனத் தெரிவித்ததோடு சீனாவுடன் இணைந்து, பேச்சுவார்த்தையின் மூலம், ஒன்றுக்கு ஒன்று புரிந்துணர்வை அதிகரித்து, வர்த்தகம், முதலீடு, அறிவியல் தொழில் நுட்பம், கல்வி உள்ளிட்ட துறைகளின் ஒத்துழைப்புகளை ஆழமாக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். அதோடு, நாகரிக பண்பாட்டுப் பரிமாற்றத்தை விரிவாக்கி, இரு நாடுகளின் மக்களுக்கும் எதிர்கால தலைமுறையினருக்கும் நன்மை பயக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.