தைவானுக்கு அமெரிக்காவின் ஆயுத விற்பனை பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2024-06-21 19:48:55

தைவானுக்கு அமெரிக்கா புதிய சுற்று ஆயுதங்களை விற்பனை செய்தது குறித்து, சீனப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வூ ச்சியான் ஜுன் 21ஆம் நாள் கூறுகையில், அமெரிக்காவின் இச்செயல், ஒரே சீனா என்ற கோட்பாடு, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மூன்று கூட்டறிக்கைகள், சர்வதேச சட்டம், சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாடு ஆகியவற்றைக் கடுமையாக மீறி, சீனாவின் அரசுரிமை மற்றும் பாதுகாப்பு நலன்கள், சீன-அமெரிக்க உறவு மற்றும் இரு நாட்டுப் படைகளின் உறவு, தைவான் நீரிணை பகுதியின் அமைதி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றைக் கடுமையாகச் சீர்குலைத்துள்ளது. தைவான் சகநாட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கும் இது அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. சீனா இதற்கு உறுதியான எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றார்.

மேலும், தைவான் சுதந்திரத்துக்கு ஆதரவு அளிக்காத வாக்குறுதியை அமெரிக்கா செயல்படுத்தி, எந்த வடிவத்திலும் தைவானுக்கு ஆயுத ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்ததாக அவர் தெரிவித்தார்.