தைவான் சுதந்திர சக்திகளின் பிரிவினை நடவடிக்கைகளின் மீதான சட்டப்படி தண்டனை
2024-06-21 16:49:41

தைவான் சுதந்திர சக்திகளின் பிரிவினை நடவடிக்கைகள் மற்றும் பிரிவினைவாத குற்றங்களைத் தூண்டுவதன் மீதான சட்டப்படி தண்டனை பற்றிய கருத்துக்களை, சீனாவின் உச்ச மக்கள் நீதிமன்றம், உச்ச மக்கள்  வழக்கறிஞர் மன்றம், பொது பாதுகாப்பு அமைச்சகம், நாட்டு பாதுகாப்பு அமைச்சகம், சீனச் சட்ட நீதி அமைச்சகம் ஆகியவை ஜூன் 21ஆம் நாள் வெளியிட்டன. வெளியிடப்பட்ட நாளிலிருந்து இக்கருத்து நடைமுறைக்கு வரும்.

சட்ட நீதி பற்றிய சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் ஆட்சிமுறையையும் புதிய காலத்தில்  தைவான் பிரச்சினையைத் தீர்ப்பது பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது கருத்தையும் இது ஆழமாகச் செயல்படுத்தும். பல்வேறு வழிமுறைகளின் மூலம் பிரிவினைவாத நடவடிக்கை மேற்கொள்வதைச் சட்டப்படி கடுமையாக தண்டனை வழங்குவதற்கு தெளிவான வழிகாட்டுதலை இது வழங்கும்.