8ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சி நடைபெறவுள்ளது
2024-06-22 19:09:41

8ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சியும், 28ஆவது சீனாவின் குன் மிங் ஏற்றுமதி இறக்குமதி பொருட்காட்சியும், ஜுலை 23முதல் 28ஆம் நாள் யுன்னான் மாநிலத்தில் நடைபெற உள்ளது.

ஒரு இலட்சத்து 50ஆயிரம் சதுர மீட்டர் பரப்பில் 15 காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், இணையம் மூலம் காட்சி, நேரலை, கலந்தாய்வு உள்ளிட்டவையும் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. சரக்கு வர்த்தகம், முதலீடு, சுற்றுலா ஒத்துழைப்பு மற்றும் பண்பாட்டு பரிமாற்றம் ஆகியவற்றில் இந்தப் பொருட்காட்சிநாடுகளுக்கிடையே பாலமாக பங்கு ஆற்றி வருகிறது.