சீனாவின் தாலியனில் கோடைக்கால தாவோஸ் மன்றக்கூட்டம்
2024-06-22 15:57:26

15ஆவது கோடைக்கால தாவோஸ் மன்றக்கூட்டம் ஜுன் 25ஆம் நாள் சீனாவின் கடலோர நகரான தாலியனில் நடைபெற உள்ளது. சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் இந்த மன்றக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்பு உரை நிகழ்த்த உள்ளார். மேலும், உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர் கிளாஸ் ஷ்வாப் உள்ளிட்ட வெளிநாட்டு விருந்தினர்களைச் சந்தித்து, வெளிநாட்டு தொழில் மற்றும் வர்த்தகத் துறைப் பிரதிநிதிகளுடன் உரையாடி கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் 21ஆம் நாள் தெரிவித்தது.

போலந்து அரசுத் தலைவர், வியட்நாம் தலைமை அமைச்சர் உள்ளிட்ட சுமார் 80 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1600க்கும் மேற்பட்டோரும் இவ்வாண்டின் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.