தைவான் பிரிவினைவாதிகளுக்கு தண்டனை : சீனாவின் வழிகாட்டல் ஆவணம் வெளியீடு
2024-06-23 20:01:35

நாட்டில் பிரிவினையை உண்டாக்குவது மற்றும் தூண்டுவது போன்ற தைவான் பிரிவினைவாதிகளின் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்க, சீனா நீதி ரீதியான வழிகாட்டல் ஆவணத்தை வெளியிட்டது. இந்த ஆவணம், தைவான் சுதந்திர சக்திகள் மீது சீன அரசு மேற்கொண்டுள்ள மிக கடுமையான நடைமுறையாகும் என்றும், தைவானின் சுதந்திர சக்திகளின் செயலைத் தடுத்து, சீனாவின் ஒருமைப்பாட்டைப் பேணிக்காக்கும் விதம் வெளியிடப்பட்டதாகும் என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.

குற்றவியல் சட்டதின் மூலம், நாட்டில் விளவு ஏற்படுத்தும் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்பதன் மூலம், நாட்டின் மைய நலனைப் பேணிக்காப்பது, உலகின் பல்வேறு நாடுகளில் நடக்கும் பொதுவான நடைமுறை ஆகும்.

வெளியிடப்பட்டுள்ள ஆவணம், தைவான் சுதந்திர நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுவர்கள் மீதும், நாட்டைப் பிரித்து, பிரிவினையை தூண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் தண்டனை வரையறை செயல்முறை விளக்கம் முதலியவை தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன. இது, வழக்கு விசாரணைக்கு வழிக்காட்டல் மற்றும் ஆதாரவு அளிக்கிறது.

இந்த ஆவணத்தின் நடைமுறையாக்கம், தைவான் சுதந்திரத்துக்கு எதிராக சீன அரசு விடுத்த எச்சரிக்கையாக இருப்பதோடு, தைவான் சுதந்திரத்தை சட்டம் ஏற்காது என்பதை சர்வதேச சமூகத்திடம் அறிவித்துள்ளதாக தைவான் அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர்.