அமெரிக்க வான்படைத் தளத்தை மூட கோரி ஐரோப்பிய நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்
2024-06-23 17:14:30

ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரான்ஸ் முதலிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஜுன் 22ஆம் நாளன்று ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியான கேய்செர்ஸ்ளாவ்டெர்ன் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், ராம்ஸ்டேயின் வான்படைத் தளத்தை மூடவும், மேற்கத்திய நாடுகள் அமைதியான முறையில் ரஷிய-உக்ரைன் நெருக்கடியைத் தீர்க்கவும் மக்கள் கோரியுள்ளர்.

அப்போது, சுமார் ஆயிரம் மக்கள் நகரின் மையப் பகுதியில் ஒன்றுகூடி, பேச்சு, பாடல் உள்ளிட்ட வழிமுறையின் மூலம் அமெரிக்கா இடைவிடாமல் போர் தொடுத்து, உலகின் அமைதி மற்றும் நிலைப்புத்தன்மையைப் பாதித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினர்.

1951ஆம் ஆண்டு கட்டப்பட்ட ராம்ஸ்டேயின் வான்படைத்தளம், ஐரோப்பாவிலுள்ள நேட்டோவின் மிகப் பெரிய வான்படைத் தளமாகவும், ஐரோப்பாவிலுள்ள அமெரிக்க வான்படையின் தலைமையகமாகவும் திகழ்கிறது.