மறுபயன்பாட்டு ஏவூர்தியின் சோதனை வெற்றி: சீனா
2024-06-23 20:22:22

மறுபயன்பாட்டு ஏவூர்தி ஒன்றின் ஏவுதல் மற்றும் இறங்குதல் சோதனை ஜுன் 23ஆம் நாள் ஜியுச்சுவன் ஏவுத்தளத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில், 3.8 மீட்டர் விட்டம் கொண்ட இந்த ஏவூர்தி 12 கிலோமீட்டர் உயரத்தை எட்டிய பிறகு திட்டமிடப்பட்ட இடத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. 10 கிலோமீட்டர் அளவிலான இத்தகைய சோதனையை சீனா வெற்றிகரமாக மேற்கொள்வது முதல்முறை ஆகும்.

2025ஆம் ஆண்டுக்குள் 4 மீட்டர் விட்டமுள்ள மறுபயன்பாட்டு ஏவூர்தியை தயாரிக்கும் இலக்கை நனவாக்குவதற்கு இந்தச் சோதனை, தொழில்நுட்ப முன்னோடியாக அமைந்தது.