2024 கோடைக்கால தாவோஸ் மன்றக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தயார்
2024-06-24 14:29:25

ஜூன் 25முதல் 27ஆம் நாள் வரை, 15ஆவது கோடைக்கால தாவோஸ் மன்றக்கூட்டம் சீனாவின் லியோநிங் மாநிலத்தின் தாலியேன் நகரில் நடைபெற உள்ளது. உலக புதிய பொருளாதாரம், சீனா மற்றும் உலகம், தொழிலின் முன்னணி வளர்ச்சி முதலிய 6 தலைப்புகள் பற்றி 120க்கும் அதிகமான வெளிப்படை நிகழ்ச்சி நிரல்கள் நடப்பு மன்றக்கூட்டத்தில் நடத்தப்படும். உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான புதிய உந்து ஆற்றலை வெளிக்கொணர்வது குறித்து அதில் பங்கேற்கவுள்ள பல்வேறு தரப்புகள் கூட்டாக விவாதித்து முன்மொழிவுகளை வழங்குவர். தற்போது, இம்மன்றக்கூட்டத்துக்கான பல்வேறு ஏற்பாடுகள் தயாராகியுள்ளன.