காசா பகுதியில் 37598 பேர் உயிரிழப்பு
2024-06-24 09:53:54

காசா பகுதியில் சுகாதாரத் துறை 23ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவப் படை மேற்கொண்ட தாக்குதலில் 47 பேர் உயிரிழந்தனர். 121 பேர் காயமடைந்தனர். கடந்த ஆண்டின் அக்டோபர் 7ஆம் நாள் துவங்கிய புதிய சுற்று இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில், இது வரை இஸ்ரேலால் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையில் 37598 பாலஸ்தீனவர்கள் உயிரிழந்தனர். 86032 பேர் காயமடைந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் இராணுவம் காசா பகுதியின் மீது பல முறை வான் தாக்குதல்களை நடத்தின. இதில் உயிரிழந்த பலர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களாவர், மற்றவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று இவ்வறிக்கை வெளியிட்டது.