ரஷிய தாகெஸ்தான் குடியரசில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 15பேர் உயிரிழப்பு
2024-06-24 11:05:44

ரஷியத் தேசிய பங்கரவாத எதிர்ப்புக் கமிட்டி 23ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, தென் ரஷியாவின் தாகெஸ்தான் குடியரசின் தலைநகர் மக்காச்சலா மற்றும் டெர்பென்ட் நகரிலுள்ள 3 தேவாலயங்கள் மற்றும் காவல் நிலையம் ஒன்றின் மீது அன்று அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தினர்.

அவற்றில் குறைந்தது 15 காவற்துறையினர்கள் உயிரிழந்தனர். 25பேர் காயமடைந்தனர். பயங்கரவாத எதிர்ப்பு நிலைமையில்  நுழைந்ததாக தாகெஸ்தான் குடியரசு அறிவித்துள்ளது.

6 தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தனர். அவர்களின் அடையாளம் பற்றிய புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று ரஷிய கூட்டமைப்பின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது.