சீனப் பண்பாட்டினால் ஈர்க்கப்பட்ட போலந்து அரசுத் தலைவரின் மனைவி
2024-06-25 10:00:00

சீன அரசுத் தலைவரின் மனைவி பங் லீயுவன் 24ஆம் நாள் பிற்பகல், சீனாவில் பயணம் மேற்கொண்டிருக்கின்ற போலந்து அரசுத் தலைவரின் மனைவி அஜடாவுடன் இணைந்து, சீனத் தேசிய நாடக அரங்கில் பார்வையிட்டார்.

சீனாவும் போலந்தும் நீண்டகால வரலாற்று மற்றும் பாரம்பரியம் மற்றும் பண்பாடுகளைக் கொண்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில், இரு தரப்புகளுக்கிடையில் மானுடப் பண்பாட்டு பரிமாற்றம் ஆக்கப்பூர்வமாக நடைபெற்று வருகின்றது. இரு நாட்டுப் பண்பாடுகளுக்கிடையில் ஒன்றுக்கு ஒன்று கற்றுக் கொண்டு, இரு நாட்டு மக்களுக்கிடையில் புரிந்துணர்வும் நட்புறவும் ஆழமாகியுள்ளது என்று பங் லீயுவன் தெரிவித்தார்.

சீனப் பண்பாடு நீண்டகாலமாக பரவி வருவது, அவரது மனதில் ஆழப்பதிந்துள்ளது. பரிமாற்றத்தையும் ஒத்துழைப்புகளையும் இரு தரப்பும் மேலும் வலுப்படுத்தி, இரு நாட்டு மக்களின் நட்புறவைத் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்று அஜடா விருப்பம் தெரிவித்தார்.