சீன-ஐரோப்பிய வர்த்தக சர்ச்சைக்குச் சரியான தீர்வு----பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு
2024-06-25 09:57:58

சீன வணிகத் துறை அமைச்சர் வாங்வேன்டௌ 22ஆம் நாள் அழைப்பையேற்று ஐரோப்பிய ஆணையத்தின் நிர்வாகத் துணைத் தலைவரும் வர்த்தக ஆணையருமான டோம்ப்ரோவ்ஸ்கிஸ் காணொளி வழியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சீன மின்சார வாகனங்கள் மீது சலுகைக்கு எதிரான வரி வசூலிப்பு புலனாய்வை ஐரோப்பிய ஆணையம் மேற்கொள்வது பற்றி கலந்தாய்வைத் துவங்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளைப் பாதிக்காமல் தவிர்க்கும் வகையில், பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் வர்த்தக சர்ச்சைக்குத் தீர்வு காணும் விருப்பம் இரு தரப்புக்கும் உண்டு.

இவ்வார இறுதியில் ஜெர்மனித் துணை தலைமை அமைச்சரும் பொருளாதாரம் மற்றும் காலநிலை பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராபர்ட் ஹேபெக் சீனாவில் பயணம் மேற்கொண்டார். பயணத்தின் போது, ஹேபெக் கூறுகையில், தற்போதைய நிலைமையில் கூடுதல் சுங்க வரி வசூலிப்பு வர்த்தக சர்ச்சை தீவிரமாகி வருவதற்கு வழிகாட்டும். பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு தான் அதற்கான தீர்வாகும் என்றார்.

பாதுகாப்புவாதம் போட்டியாற்றலைப் பாதுகாக்க முடியாது. சீன-ஐரோப்பிய வர்த்தக சர்ச்சையைத் தீவிரமாக்குவதைச் சீனா விரும்பவில்லை. பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம், ஒன்றுக்கொன்று நியாயமான கவலைகளைக் கவனித்து பிரச்சினைகளைப் பகுத்தறிவு முறையிலும் தொழில்முறை வழியிலும் தீர்க்க சீனா விரும்புகிறது. அதே வேளையில், கருத்தியல் சிந்தனை மற்றும் குறுகிய லாபத்தால் ஐரோப்பிய தரப்புக்கு பாதிப்ப ஏற்படாமல் இருப்பதையும் சீனா விரும்புகிறது. சீனாவுடன் சேர்ந்து சரியான திசையை நோக்கி பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம், இரு தரப்பின் நலன்களுக்குப் பொருந்தி இரு தரப்பும் ஏற்றுக்கொள்ள கூடிய முடிவைக் கண்டறிய விரும்புவதாகவும் சீனத் தரப்பு தெரிவித்துள்ளது.