பஞ்ச சீல கோட்பாடு வெளியான 70ஆவது ஆண்டு நினைவுக் கூட்டத்தில் ஷிச்சின்பிங் பங்கேற்பு
2024-06-25 10:08:17

இவ்வாண்டு பஞ்ச சீல கோட்பாடுகள் வெளியான 70ஆவது ஆண்டு நிறைவாகும். அதனைக் கொண்டாடும் சிறப்பு நினைவுக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஜூன் 28ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூவா ச்சுன்யின் அம்மையார் அறிவித்தார்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்நினைவுக் கூட்டத்தில் பங்கேற்று முக்கிய உரை நிகழ்த்துவார் என்றும் அவர் தெரிவித்தார்.