தென் கொரியாவின் மின்கலத் தொழிற்சாலையில் 18 சீன தொழிலாளர்கள் உயிரிழப்பு
2024-06-25 11:02:59

தென் கொரியாவின் கியோங்ஜி மாநிலத்தின் ஹாசன் சியில் மின்கலத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 சீன தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டிற்கான சீனத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்விபத்து மீட்புதவி குழு வெளியிட்ட புதிய தகவல்களின்படி,  22 பேர் இந்த தீ விபத்தில் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.

இந்த மின்கலத் தொழிற்சாலையில் அதிகமான லித்திய உற்பத்திப் பொருட்கள் இருந்தன. இவ்விபத்தினால், பல மின்கலங்கள் வெடித்தன.