நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் போலந்துக்கு விசா இல்லாத கொள்கைச:சீனா
2024-06-25 19:35:01

சீனாவுக்கும் வெளிநாட்டுக்கும் இடையே மக்கள் தொடர்பை மேலும் மேம்படுத்தும் வகையில், சீனாவில் விசா இல்லாமல் பயணம் செய்யும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சீனத் தரப்பு முடிவெடுத்துள்ளதாகவும், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் போலந்து ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு, இலவச விசா கொள்கையை அமல்படுத்துவதாகவும் சீன வெளியுறவு அமைச்சகம் 25ஆம் நாள் தெரிவித்தது.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் கூறுகையில், 2024ஆம் ஆண்டு ஜுலை முதல் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாள் வரை, மேற்கூறிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள், வணிகம், சுற்றுலா, உறவினர்கள் மற்றும் நண்பர்களைக் காணுதல், எல்லையை கடந்து வருவது ஆகியவற்றுக்கு 15 நாட்கள் வரை தங்க விரும்புவர்கள் ஆகியோர் விசா இல்லாமல் சீனாவுக்கு வருகை தர அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்தார்.