சீன-போலந்து அரசுத் தலைவர்கள் சந்திப்பு
2024-06-25 10:23:49

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஜுன் 24ம் நாள் மாலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில், சீனாவில் அரசு பயணம் மேற்கொண்டு உள்ள போலந்து அரசுத் தலைவர் அன்ட்ச்சேஜ் டுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். போலந்துடன் இணைந்து, பஞ்ச சீல கோட்பாடுகளைப் பின்பற்றி, தூதாண்மையுறவை நிறுவிய நோக்கத்துடன், பாரம்பரிய நட்பை நிலைநிறுத்தி, இரு நாட்டுறவை மேலும் உயர் நிலை நோக்கி வளர்வதை முன்னெடுக்க சீனா விரும்புகிறது என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், போலந்து மக்கள், சீனாவில் 15 நாட்கள் தங்கி, விசா இல்லாத அனுமதிக் கொள்கை, ஒருசார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. பண்பாடு, இளைஞர் தொடர்பு, கல்வியியல், ஊடகம் முதலிய துறைகளில் இரு தரப்புகள் ஒத்துழைப்பை முன்னெடுக்க வேண்டும். போலந்து உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து, சீனா மற்றும் மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு முறைமையின் தொடரவல்ல வளர்ச்சியையும், சீன-ஐரோப்பிய உறவின் சுமுகமான மற்றும் நிலையான வளர்ச்சியையும் முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவின் செயல்பாட்டுத் திட்டத்தை(2024-2027)இரு தரப்புகள் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.