சாங் ஏ-6 கடமையை வெற்றிகரமாக நிறைவடைவதற்கான ஷிச்சின்பிங்கின் வாழ்த்துக்கள்
2024-06-25 15:13:47

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங், 25ஆம் நாள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி, சீன அரசவை மற்றும் மத்திய இராணுவ ஆணையத்தின் சார்பில், சாங் ஏ-6 சந்திர மண்டல ஆய்வுக் கலம் கடமையை வெற்றிகரமாக நிறைவடைவதற்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

அவர் கடிதத்தில் கூறுகையில்,

சாங் ஏ-6 சந்திர மண்டல ஆய்வுக் கலம், சந்திரனின் இருண்ட பகுதியில் இருந்து மாதிரியை எடுத்து பூமிக்குத் திரும்பியது என்பது மனிதக் குல வரலாற்றில் முதன்முறையாகும். இது, சீனாவை விண்வெளி மற்றும் அறிவியல் தொழில் நுட்ப வல்லரசாக கட்டியமைக்கும் இன்னொரு சாதனையாகும். தற்போதைய முன்னேற்றப் போக்கைக் கடைபிடித்து, விண்வெளி ரகசியத்தை ஆராய்ந்து, மனித குலத்தின் நலன்களைத் தேடுவதற்கு புதிய சாதனைகளை படைக்க வேண்டும். வல்லரசை கட்டியமைப்பதற்கும், சீன தேசத்தின் மறுமலர்ச்சிக்கும் விரைவுபடுத்துவதற்கு புதிய பங்காற்ற வேண்டும் என்றார் அவர்.