வெளிநாட்டு தொழில் மற்றும் வர்த்தகத் துறைப் பிரதிநிதிகளுடன் சீன தலைமை அமைச்சர் உரையாடல்
2024-06-25 20:25:25

2024ஆம் ஆண்டு கோடைக்கால தாவோஸ் மன்றக்கூட்டத்தில் கலந்து கொண்ட வெளிநாட்டு தொழில் மற்றும் வர்த்தகத் துறைப் பிரதிநிதிகளுடன் சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் ஜுன் 25ஆம் நாள்  உரையாடல் கூட்டம் நடத்தினார்.

அப்போது அவர் கூறுகையில் சீனத் தயாரிப்புகளுக்கு அதிக போட்டித்திறன் உள்ளது. மானியம், பாதுகாப்புவாதம் போன்ற கொள்கைகளுக்குப் பதிலாக, நியாயமான போட்டிச்சூழலில் அதன் போட்டித்திறன் படிப்படியாக உருவானது என்று வலியுறுத்தினார்.

சீனாவின் மின்சார வாகன ஏற்றுமதி, சர்வதேச சந்தையின் தேவையை முக்கியமாக சார்ந்திருக்கிறது என்றும், தொழில் மானியம் குறித்து உலக வர்த்தக அமைப்பின் தொடர்புடைய விதிகளை சீனா மீறவில்லை என்றும் லீச்சியாங் கூறினார்.